என் மலர்

  செய்திகள்

  இலங்கை சிறைகளில் 81 தமிழக மீனவர்கள்: கனிமொழி கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
  X

  இலங்கை சிறைகளில் 81 தமிழக மீனவர்கள்: கனிமொழி கேள்விக்கு மத்திய மந்திரி பதில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டுவருவதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்ற கனிமொழியின் கேள்விக்கு மத்திய மந்திரி பதில் அளித்துள்ளார்.
  புதுடெல்லி:

  டெல்லி மேல் சபையில் தி.மு.க எம்.பி. கனிமொழி

  இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் எத்தனை பேர் இருக்கிறார்கள். அவர்களை மீட்டுவருவதற்கும், மறு வாழ்வுக்கும் மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது?” என்று எழுத்துப்பூர்வமாக கேட்டிருந்தார்.

  அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியான வி.கே.சிங் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

  ’’இலங்கை அரசு அளித்த புள்ளி விபரங்களின் படி கடந்த ஜூலை 17 ஆம் தேதி வரை 81 மீனவர்கள் இலங்கை சிறையில் இருக்கிறார்கள்.

  இந்திய மீனவர்களை விரைவில் மீட்டுக் கொண்டு வருவதற்கு இலங்கை அரசுடன் தொடந்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கொழும்பில் உள்ள நமது இந்திய தூதரகம் இலங்கை சிறையில் இருக்கும் இந்திய மீனவர்களுக்கு சட்டரீதியான மற்றும் மனிதாபிமான ரீதியான உதவிகளை செய்து வருகிறது.

  மத்திய அரசு செய்த ராஜதந்திர முயற்சிகளின் காரணமாக 2017 ஆம்ஆண்டில் இதுவரை இலங்கை கட்டுப்பாட்டில் இருந்த 174 இந்திய மீனவர்களை மீட்டிருக்கிறோம்.

  இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் மத்திய அரசு உயர்மட்ட அளவில் தொடர்ந்து இலங்கையுடன் பேசி வருகிறது. பிரதமர் மோடி கடந்த மே மாதம் இலங்கை சென்ற போது அந்நாட்டின் அதிபரோடும், பிரதமரோடும் மீனவர்கள் பிரச்னை பற்றி பேசியுள்ளார்.  இலங்கை பிரதமர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா வந்த போதும், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி கடந்த ஜூன் மாதம் இந்தியா வந்த போதும் நமது வெளியுறவுத்துறை மந்திரி அவர்களிடம் மீனவர்கள் விவகாரம் பற்றி பேச்சு நடத்தியிருக்கிறார்.

  ஆழ்கடலில் சூரை மீன் பிடிப்பில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு உதவ மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசின் சார்பில் நடப்பு நிதியாண்டில் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

  தமிழகத்தில் குந்துக்கல், மூக்கையூர் ஆகிய இடங்களில் மீன்பிடித்துறை முகங்கள் கட்டப்பட்டு வருகின்றன’’

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×