என் மலர்

  செய்திகள்

  ஜி.எஸ்.டி. அறிமுக விழாவில் காங்கிரஸ் அணியில் உள்ள 5 எதிர்க்கட்சிகள் பங்கேற்பு: சோனியா காந்தி அதிருப்தி
  X

  ஜி.எஸ்.டி. அறிமுக விழாவில் காங்கிரஸ் அணியில் உள்ள 5 எதிர்க்கட்சிகள் பங்கேற்பு: சோனியா காந்தி அதிருப்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜி.எஸ்.டி. அறிமுக விழாவில் காங்கிரஸ் அணியில் உள்ள 5 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டனர். சோனியா மற்றும் மூத்த தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  புதுடெல்லி:

  பாரதிய ஜனதா கட்சியின் அடுத்தடுத்த தொடர் வெற்றிகளைத் தொடர்ந்து நாடெங்கும் உள்ள எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வரும் முயற்சிகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டது.

  அதற்கு ஓரளவு பலன் கிடைத்தது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க் கட்சிகள் அணியில் தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் உள்பட 17 கட்சிகள் ஒன்று திரண்டன.

  ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீராகுமார் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 17 எதிர்க்கட்சிகளும் ஓரணியில் உள்ளன.

  இந்த நிலையில் ஜி.எஸ்.டி. அறிமுக விழா நேற்றிரவு பாராளுமன்றத்தில் நடந்தது. இந்த விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ் அறிவித்தது. இதைத் தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜி.எஸ்.டி. விழாவை புறக்கணிக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

  இந்த நிலையில் ஜி.எஸ்.டி. விழாவில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், நவீன்பட் நாயக்கின் பிஜூஜனதாதளம், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி, தேவேகவுடாவின் மதச் சார்ப்பற்ற ஜனதாதளம் ஆகிய 5 கட்சிகள் கலந்து கொண்டனர்.மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பிரதிநிதிகளும் விழாவில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

  விருந்திலும் இந்த கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இது காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் மூத்த தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளின் அடுத்தக்கட்ட நகர்வை முறியடிக்கும் வகையில் இது அமைந்து விட்டதாக கூறப்படுகிறது.


  ஜி.எஸ்.டி.யை வைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டு நடவடிக்கையில் பா.ஜ.க. அரசு பிளவை ஏற்படுத்தி விட்டதாக டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கிடையே ஜி.எஸ்.டி. விழாவில் கலந்து கொள்ளாமல் இருக்க தோழமை கட்சி தலைவர்களை காங்கிரஸ் தலைவர்கள் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

  சரத்பவார், தேவேகவுடா ஆகியோருடன் போனில் பேசிய காங்கிரஸ் தலைவர்கள், ஜி.எஸ்.டி. விழாவை புறக்கணிக்கும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் அவர்கள் இருவரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

  சரத்பவார் தன்னுடன் தனது கட்சி மூத்த தலைவர்கள் பிரபுல் படேல், தாரிக் அன்வர் ஆகிய இருவருடனும் சேர்ந்து சென்று கலந்து கொண்டார். அது போல சமாஜ்வாடி எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

  எதிர்க்கட்சிகளிடம் ஒருமித்த கருத்து இல்லை என்பதையே இது காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

  Next Story
  ×