search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனுத்தாக்கல்: நிகழ்ச்சியில் பங்கேற்க ஓ.பி.எஸ். ஈபிஎஸ் டெல்லி பயணம்
    X

    ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனுத்தாக்கல்: நிகழ்ச்சியில் பங்கேற்க ஓ.பி.எஸ். ஈபிஎஸ் டெல்லி பயணம்

    பா.ஜனதா கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் பழனிச்சாமி, பன்னீர்செல்வம் தனித்தனியாக டெல்லி சென்றுள்ளனர்.
    புதுடெல்லி:

    பா.ஜனதா கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முதல்–மந்திரிகள் முன்னிலையில் அவர் மனு தாக்கல் செய்கிறார்.

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிக்காலம், அடுத்த மாதம் 24–ந் தேதி முடிவடைய உள்ளதால், அடுத்த மாதம் 17–ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், வருகிற 28–ந் தேதி முடிவடைகிறது.

    இத்தேர்தலில், ஆளும் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பா.ஜனதா கூட்டணியில் இடம்பெறாத அ.தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, உடன் இருக்குமாறு தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு முதல்–மந்திரிகளுக்கு மத்திய மந்திரி வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்திருந்தார்.

    அதை ஏற்று நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் பழனிச்சாமியும், அதேபோல் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின்  பன்னீர்செல்வமும் தனித்தனியாக டெல்லி சென்றுள்ளனர்

    பா.ஜனதா தலைவர் அமித் ஷா, பல்வேறு மத்திய மந்திரிகள், பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.



    இவர்களில் பலர், ராம்நாத் கோவிந்தின் வேட்புமனுவை முன்மொழிபவர்களாகவும், வழிமொழிபவர்களாகவும் இருப்பார்கள் என்று தெரிகிறது.

    குறிப்பாக ராம்நாத் கோவிந்தை ஆதரித்து வேட்புமனுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மைத்ரேயன் எம்.பி. கையெழுத்து போட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×