என் மலர்

  செய்திகள்

  அசாமில் மீண்டும் வெள்ளம்: 4 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை
  X

  அசாமில் மீண்டும் வெள்ளம்: 4 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அசாமில் பெய்து வரும் கனமழையால் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
  கவுகாத்தி:

  அசாமில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

  இந்நிலையில், கடும் மழையால் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களை சேர்ந்த 38 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை குழு அதிகாரிகள் கூறுகையில், ‘‘லக்கிம்பூர் மற்றும் கரிம்கஞ்ச் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  16 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் ஓடும் ஜியாபார்லி மற்றும் கோபிலி ஆறுகளில் அளவுக்கு மீறி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. வெள்ளத்தில் 100 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த வெள்ளத்தில் 783 ஹெக்டேர் பரப்பிலான விளைநிலங்கள் பாதிப்பு அடைந்துள்ளன’’ என தெரிவித்தனர்.
  Next Story
  ×