என் மலர்

  செய்திகள்

  சிம்லாவில் ஜனாதிபதி ஓய்வு மாளிகையில் அனுமதி மறுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த்
  X

  சிம்லாவில் ஜனாதிபதி ஓய்வு மாளிகையில் அனுமதி மறுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிம்லாவில் ஜனாதிபதியின் ஓய்வு மாளிகைக்கு சென்று சுற்றிப்பார்க்க விரும்பிய ராம்நாத் கோவிந்த் முன் அனுமதி பெறவில்லை என்பதால் அனுமதி மறுக்கப்பட்ட தகவல்கள் தற்போது ஊடகங்களில் கசிந்திருக்கின்றன.
  சிம்லா:

  பாரதீய ஜனதாவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், பீகார் கவர்னர் என்ற நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி தனது குடும்பத்தினருடன் சிம்லாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

  அவரும், அவரது மனைவியும் அரசு வாகனத்திலும், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் வாடகை காரிலும் பல இடங்களுக்கும் சென்று சுற்றிப்பார்த்தனர்.

  அப்போது சிம்லாவில் இருந்து 15 கி.மீ. தொலைவில் மசோப்ரா மலைப்பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் ஓய்வு மாளிகைக்கு சென்று சுற்றிப்பார்க்க விரும்பினார் ராம்நாத் கோவிந்த். அவரும், குடும்பத்தினரும் அங்கு சென்றும் விட்டனர். ஆனால் சென்ற பிறகுதான், அந்த மாளிகைக்கு முன் அனுமதி பெற்றுத்தான் செல்ல முடியும் என தெரிய வந்தது.

  ராம்நாத் கோவிந்த் முன் அனுமதி பெறவில்லை என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்த தகவல்கள் இப்போதுதான் ஊடகங்களில் கசிந்திருக்கின்றன.

  ஆனால் இப்போது ஜனாதிபதி தேர்தலில் அவர் வேட்பாளராகி விட்டார். வெற்றி பெறுவதற்கும் கணிசமான வாய்ப்புகள் உள்ளன. எனவே அவர் ஜனாதிபதியாகி விட்டால், யாருடைய முன் அனுமதியும் பெறாமல் சகல மரியாதையுடனும் அந்த ஓய்வு மாளிகைக்கு செல்ல முடியும், சுற்றிப்பார்க்க முடியும், தங்க முடியும்.

  Next Story
  ×