என் மலர்

  செய்திகள்

  சிறு, குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தது பஞ்சாப் அரசு
  X

  சிறு, குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தது பஞ்சாப் அரசு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு சிறு, குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தது.
  அமிர்தசரஸ்:

  பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அமரிந்தர் சிங் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றையை அமைச்சரவையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

  இதில் முக்கியமாக, சிறு, குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தது. சிறு விவசாயிகளின் அனைத்து கடன்களையும், அதேபோல் 5 ஏக்கர் வரை வைத்துள்ள குறு விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான கடன்களையும் தள்ளுபடி செய்ய பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. 

  இந்த அமைச்சரவையில், தேசிய நெடுஞ்சாலைகளில் இனி மது விற்க அனுமதி அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதேபோல், பஞ்சாப் சட்டசபையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றப்பட்டது.
  Next Story
  ×