என் மலர்

  செய்திகள்

  ஜனாதிபதி தேர்தல்: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட தனித்தனி நிறங்களில் வாக்குச்சீட்டு
  X

  ஜனாதிபதி தேர்தல்: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட தனித்தனி நிறங்களில் வாக்குச்சீட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனி நிறங்களில் வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
  புதுடெல்லி:

  ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனி நிறங்களில் வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வருகிற 28-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. இந்த மனுக்கள் பரிசீலனை 29-ந் தேதி எனவும், வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

  புதிய ஜனாதிபதியை போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்ய ஆளும் பா.ஜனதா விரும்புகிறது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும் இதற்கு விருப்பம் தெரிவித்து உள்ள நிலையில், பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. எனினும் இதில் இழுபறி நீடித்து வருவதாக தெரிகிறது.  அப்படி இரு அணிகள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் ஜூலை 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படும். இதில் பதிவான ஓட்டுகள் 20-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்தப்படும்.

  இதற்காக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனி நிறங்களில் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி எம்.பி.க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.க்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் தயாராகி வருகின்றன.

  ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் உள்ள 4128 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 776 எம்.பி.க்கள் வாக்களிக்கின்றனர். ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 புள்ளியாக இருக்கும் நிலையில், எம்.எல்.ஏ. ஒருவரின் ஓட்டுமதிப்பு அவரது மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

  இவ்வாறு எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு வித்தியாசம் என்பதால், ஓட்டு எண்ணிக்கையின் போது எளிதாக கணக்கிடுவதற்கு இந்த இருவேறு நிறங்கள் முறை பின்பற்றப்படுகிறது.

  இதைப்போல அருணாசல பிரதேசம், பீகார், சத்தீஷ்கார், அரியானா, இமாசல பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களுக்கான வாக்குச்சீட்டு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் அச்சிடப்படும்.

  தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, அசாம், கோவா, குஜராத், காஷ்மீர், கேரளா, மராட்டியம், மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான வாக்குச்சீட்டுகள் ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் அச்சிடப்பட்டு இருக்கும்.

  ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு, ஜூலை 1-ந் தேதி மாலை வரை யாரும் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை என்றால் இந்த வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகளை தேர்தல் கமிஷன் விரைந்து நடத்தும்.

  இந்த தேர்தலில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பதற்காக பிரத்யேக பேனா வழங்கப்படுகிறது. அதை தவிர்த்து பிற பேனாக்கள் மூலம் அடையாளம் வைப்போரின் ஓட்டு செல்லாதவை என அறிவிக்கப்படும். அரியானாவில் கடந்த ஆண்டு நடந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் மை சர்ச்சையால் 12 ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டதால், இந்த புதிய நடைமுறையை தேர்தல் கமிஷன் பின்பற்ற உள்ளது.

  இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையான ரூ.15 ஆயிரத்தை ரொக்கமாகவே செலுத்த வேண்டும். இந்த பணத்தை வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனு தாக்கலின் போது அங்கிருக்கும் வங்கி அதிகாரியிடம் செலுத்த வேண்டும். அல்லது ரிசர்வ் வங்கியில் பணமாக செலுத்தி அதற்கான ரசீதை வேட்புமனுவுடன் இணைக்க வேண்டும்.

  இந்த டெபாசிட் பணத்தை காசோலையாகவோ, கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமோ அல்லது மின்னணு பரிமாற்றங்கள் மூலமாகவோ செலுத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. 
  Next Story
  ×