search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சுகோய்-30 விமானத்தில் பயணம் செய்த 2 விமானிகள் இறந்ததாக அறிவிப்பு
    X

    சுகோய்-30 விமானத்தில் பயணம் செய்த 2 விமானிகள் இறந்ததாக அறிவிப்பு

    அசாமில் மாயமான போர் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதில் பயணம் செய்த 2 வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    இட்டாநகர்:

    அசாம் மாநில தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 23-ந்தேதி சுகோய்-30 ரக போர் விமானத்தில் 2 விமானிகள் பயிற்சிக்காக புறப்பட்டு சென்றனர். தேஜ்பூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் பறந்தபோது திடீரென்று ரேடாரின் இணைப்பை விமானம் இழந்தது.

    ரேடார் இணைப்பை இழந்த பகுதி சர்ச்சைக்குரிய சீன எல்லையாகும். எனவே விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது வேறு காரணங்களுக்காக தரை இறக்கப்பட்டதா? என விசாரணை நடைபெற்று வந்தது. மாயமான விமானத்தை தேடும் பணியும் நடைபெற்றது.

    இதற்கிடையே மாயமான போர் விமானத்தின் பாகங்கள் அருணாசல பிரதேச மாநிலம் காமெங் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் கடந்த மே 26-ம் தேதி கண்டு பிடிக்கப்பட்டது.



    ஆனால் விமானம் நொறுங்கியதற்கான காரணம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. மேலும் அதில் பயணம் செய்த வீரர்கள் கதி என்ன என்றும் தெரியாமல் இருந்தது.

    இந்நிலையில், சுகோய்-30 போர் விமானத்தில் பயணம் செய்த 2 வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்க்ரூட்ரான் தலைவர் டி. பங்காஜ் மற்றும் விமான லெப்டினண்ட் எஸ்.அச்சுதேவ் ஆகியோர் விமானிகளாக பணியாற்றினர்.

    சுகோய்-30 ரக போர் விமானம் ரஷியாவில் தயாரிக்கப்பட்டது. 2 என்ஜின்களுடன் அதிவேகமாக பறக்கும் திறன் கொண்டது. கடந்த 1990-ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×