என் மலர்

  செய்திகள்

  நாடு முழுவதும் 100 யோகா பூங்காக்கள் - மத்திய அரசு திட்டம்
  X

  நாடு முழுவதும் 100 யோகா பூங்காக்கள் - மத்திய அரசு திட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 100 யோகா பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
  புதுடெல்லி:

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 100 யோகா பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

  உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கிய மிகப்பெரும் வாழும் கலையான யோகாவை சர்வதேச நாடுகள் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டு உள்ளன. யோகாவின் மகத்துவத்தை உணர்ந்த ஐ.நா.வும், ஆண்டு தோறும் ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்க அழைப்பு விடுத்துள்ளது.

  அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி உலகின் பல்வேறு நாடுகளில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

  இந்தியாவிலும் சர்வதேச யோகா தினம் மிகவும் விமரிசையாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி 2015-ம் ஆண்டு டெல்லியிலும், கடந்த ஆண்டு சண்டிகரிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிகளில் 150-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.

  இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான சர்வதேச யோகா தினம் அடுத்த மாதம் (ஜூன்) 21-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான முக்கிய நிகழ்ச்சி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

  பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், யோகா குருக்கள் உள்ளிட்டோருடன், 150-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளுமாக சுமார் 51 ஆயிரம் பேர் பங்கேற்று யோகா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களிலும் சிறப்பு யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

  அதே நேரம் பாரீசில் உள்ள ஈபிள் கோபுரம், நியூயார்க்கில் உள்ள மைய பூங்கா, லண்டனின் டிரபல்கர் சதுக்கம் போன்ற பகுதிகளிலும் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 100 யோகா பூங்காக்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. யோகா மற்றும் பிற நிறுவனங்கள் மூலம் இந்த பூங்காக்கள் நிர்வகிக்கப்படும். மேலும் யோகா கலையின் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு பிரதமர் விருதும் வழங்கப்படுகிறது.

  இந்த தகவல்களை மத்திய ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஓமியோபதி துறை இணை மந்திரி (தனிப்பொறுப்பு) ஸ்ரீபாத் எஸ்சோ நாயக் தெரிவித்தார். 
  Next Story
  ×