என் மலர்
செய்திகள்

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் அறிகுறிகள் உள்ளதாகவும், வருகிற 30-ந் தேதியே மழை பெய்ய தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ராஜீவன் தெரிவித்து இருந்தார்.
திருவனந்தபுரம்:
தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். ஒரு ஆண்டின் மழை பொழிவில் 70 சதவீதத்தை தென்மேற்கு பருவமழை மூலமே பெற்று வருகிறோம்.
தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறி முதலில் அந்தமான் தீவுகள் கடலில் தான் தொடங்கும். அதன் பிறகு கேரளாவில் மழை பெய்யத் தொடங்கும். பொதுவாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கிவிடும்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கும் அறிகுறிகள் உள்ளதாகவும், வருகிற 30-ந் தேதியே மழை பெய்ய தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ராஜீவன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தென் மேற்கு பருவமழை தொடங்குவதை தொடர்ந்து கண்காணித்து வந்த இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்னும் சில நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பருவமழைக்கான கருமேகங்கள் தற்போதே வானில் சூழ்ந்து வருவதாகவும் இதனால் முன் கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்குவது உறுதியாக விட்டதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரி ராஜீவன் தெரிவித்துள்ளார்.

Next Story