என் மலர்

  செய்திகள்

  சினிமா, கேபிள் டி.வி. சேவைகளுக்கு ஜி.எஸ்.டி.யில் வரி குறைக்கப்படுகிறது - மத்திய அரசு தகவல்
  X

  சினிமா, கேபிள் டி.வி. சேவைகளுக்கு ஜி.எஸ்.டி.யில் வரி குறைக்கப்படுகிறது - மத்திய அரசு தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய நிதி அமைச்சகம் சினிமா, கேபிள், டி.டி.எச். உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அடங்கிய சேவைகளுக்கு சரக்கு, சேவை வரியை குறைக்க முடிவு செய்து உள்ளது.
  புதுடெல்லி:

  சினிமா, கேபிள், டி.டி.எச். உள்ளிட்ட பொழுதுபோக்கு சேவைகளுக்கு ஜி.எஸ்.டி.யில் வரி குறைக்கப்படுகிறது.

  நாடு முழுவதும் பொருட்கள், சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

  அதன்படி பொருட்கள் மீது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 விதமான ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. எந்தெந்த பொருட்களை எந்த சதவீத வரிவிகிதத்தில் சேர்ப்பது என்பது பற்றி காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கடந்த வாரம் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் நடந்த மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

  அப்போது 1,200 வகையான சரக்குகளையும், 500 விதமான சேவைகளையும் இந்த நான்கு அடுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பின்கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

  இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அடங்கிய சேவைகளுக்கு சரக்கு, சேவை வரியை குறைக்க முடிவு செய்து உள்ளது.

  இதுபற்றி மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  தற்போது சினிமா அரங்குகளில் திரையிடப்படும் சினிமா படங்களுக்கான கேளிக்கை வரி பல மாநிலங்களில் அதிகபட்சமாக 100 சதவீதம் வரை உள்ளது. இது ஜி.எஸ்.டி.யில் 28 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் கேளிக்கை வரி உள்ளிட்ட அனைத்துவித வரிகளும் அடங்கிவிடுவதால் இனிமேல் கேளிக்கை நிகழ்ச்சிகள், காட்சிகள் மீது பஞ்சாயத்து அல்லது மாநகராட்சிகள் விதிக்கும் வரி மட்டும் நீடிக்கும்.

  இதேபோல், ஜி.எஸ்.டி. கவுன்சில் கேபிள் டி.வி. மற்றும் டி.டி.எச். சேவைகளுக் கான வரியை 18 சதவீதமாக குறைக்க முடிவு செய்து இருக்கிறது. தற்போது இந்த சேவைகள் மீது மாநில அரசுகள் விதிக்கும் கேளிக்கை வரி 10 முதல் 30 சதவீதமாகவும், கூடுதல் வரி 15 சதவீதமாகவும் உள்ளது. இந்த சேவைகளை அளிப்போரும், தாங்கள் பயன்படுத்துவதற்காக வாங்கும் ஒளிபரப்பு கருவிகள் மீது இந்த வரிச்சலுகையை பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவர்.

  இதேபோல் சர்க்கஸ், நாடக அரங்குகள், கிராமிய நடனம், நாடகங்கள் உள்ளிட்ட இந்திய கலாசார நடனங்கள் ஆகியவற்றின் மீது ஜி.எஸ்.டி.யில் விளம்பர மதிப்பு வரி மட்டுமே 18 சதவீதம் விதிக்கப்படும்.

  கேளிக்கை நிகழ்ச்சி அனுமதிக்காக ஒரு நபருக்கு வசூலிக்கப்படும் 250 ரூபாய் வரையிலான கட்டணத்துக்கு வரிவிலக்கு அளிக்க பரிசீலிப்பதற்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல் அளித்து இருக்கிறது.

  ஸ்மார்ட் போன், மருந்துகள், மருத்துவ கருவிகள் மற்றும் சிமெண்டு ஆகியவற்றின் மீதான வரிகளையும் ஜி.எஸ்.டி.யில் குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.

  தற்போது சிமெண்டுக்கு அனைத்து வரிகளையும் சேர்த்தால் 31 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. இது 28 சதவீதமாக இருக்கும். எனவே ஜூலை 1-ந் தேதி முதல் சிமெண்டு மீது 3 சதவீதம் வரி குறைகிறது. அனைத்து முறை மருத்துவ சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தற்போதைய வரி விதிப்பு முறையில் அதிகபட்சமாக 13 சதவீத வரி உள்ளது. ஜி.எஸ்.டி.யில் மருந்துகளுக்கு 12 சதவீத வரியே பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ கருவிகள் மீதான வரியும் ஜி.எஸ்.டி.யில் 12 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

  ஜி.எஸ்.டி.யில் ஸ்மார்ட் போன் மீதான வரியும் குறைக்கப்படுகிறது. தற்போது இந்த வகை போன்கள் மீது விதிக்கப்படும் வரி மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது. ஒட்டுமொத்தமாக 13.5 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி.யில் 12 சதவீதம் மட்டுமே வரி விதிக்க சிபாரிசு செய்யப்பட்டு இருக் கிறது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

  சினிமா, கேபிள் டி.வி., டி.டி.எச், ஆகிய பொழுதுபோக்கு சேவைகள் மற்றும் மருந்துகள், மருத்துவ கருவிகள், ஸ்மார்ட் போன் ஆகியவற்றின் மீது ஜி.எஸ்.டி.யில் வரி குறைக்கப்படுவதால் ஜூலை 1-ந் தேதி முதல் இவற்றின் மீதான கட்டணங்கள் மற்றும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  Next Story
  ×