என் மலர்

  செய்திகள்

  கேரளாவில் பன்றி காய்ச்சல் பாதிப்பால் 4 மாதத்தில் 40 பேர் பலி
  X

  கேரளாவில் பன்றி காய்ச்சல் பாதிப்பால் 4 மாதத்தில் 40 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த 4 மாதத்தில் 40 பேர் பலியாகி உள்ளனர்.
  திருவனந்தபுரம்:

  கேரளாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளதால் இதுபற்றி கேரள சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவக்குமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து சுகாதாரதுறை மந்திரி சைலஜா கூறியதாவது :-

  மாநிலம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 2,349 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது. இவர்களில் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 500 பேரில் 40 பேர் தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு பன்றி காய்ச்சல் தவிர வேறு பல நோய்களும் இருந்ததால் உயிரிழந்துள்ளனர். அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×