என் மலர்

  செய்திகள்

  கொச்சி அருகே தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு கொடியுடன் ஓடி ரெயிலை நிறுத்திய ஊழியர்
  X

  கொச்சி அருகே தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு கொடியுடன் ஓடி ரெயிலை நிறுத்திய ஊழியர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொச்சி அருகே தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்ட ஊழியர் ஒருவர், சிவப்பு கொடியுடன் ஒரு கிலோ மீட்டர் ஓடிச் சென்று எதிரில் வந்த ரெயிலை சமார்த்தியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
  திருவனந்தபுரம்:

  கொச்சி அருகே கலமச்சேரியில் ரெயில்வே கேட் உள்ளது. இங்கு ஊழியராக ராஜேஷ்குமார் சவுத்திரி (வயது 25) என்பவர் பணியாற்றி வருகிறார்.

  நேற்று காலை இந்த வழியாக செல்வதற்கு பெங்களூரு - கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தை பார்வையிட்ட ராஜேஷ் குமார் சவுத்திரி பெரிய விரிசல் ஏற்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

  உடனே அவர் கையில் சிவப்பு கொடியை ஏந்தியபடி தண்டவாளத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்றார். அப்போது எதிரில் கன்னியாகுமரி ரெயில் வந்துகொண்டிருந்தது. சிவப்பு கொடியை காட்டி அந்த ரெயிலை அவர் தடுத்து நிறுத்தினார்.

  இதன்பிறகு இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ரெயில்வே ஊழியர்களுடன் அங்கு சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

  இதன்பிறகு 2 மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ரெயில்வே ஊழியர் ராஜேஷ்குமார் சவுத்திரி சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அவரை அதிகாரிகள் பாராட்டினார்கள்.

  ரெயில்வே ஊழியர் ராஜேஷ்குமார் சவுத்திரி ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு இதேபோல தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை கண்டுபிடித்து ரெயில் விபத்தை தடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×