என் மலர்

  செய்திகள்

  சுவிட்சர்லாந்தில் அடுத்த மாதம் கூடும் என்.எஸ்.ஜி - இந்தியா உறுப்பினராக வாய்ப்பு?
  X

  சுவிட்சர்லாந்தில் அடுத்த மாதம் கூடும் என்.எஸ்.ஜி - இந்தியா உறுப்பினராக வாய்ப்பு?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுவிட்சர்லாந்து நாட்டில் அடுத்த மாதம் என்.எஸ்.ஜி நாடுகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் இந்தியா உறுப்பினராக இணைவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  புதுடெல்லி:

  சுவிட்சர்லாந்து நாட்டில் அடுத்த மாதம் என்.எஸ்.ஜி நாடுகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் இந்தியா உறுப்பினராக இணைவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  என்.எஸ்.ஜி. எனப்படும் அணுசக்தி வினியோக கூட்டமைப்பில் 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அதில் சேருவதற்கு இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதில் இந்தியா உறுப்பு நாடாக சேர அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் சீனா மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. என்.எஸ்.ஜி.-யில் சேர பாகிஸ்தானும் முயற்சி மேற்கொண்டுவருகிறது.

  என்.எஸ்.ஜி.-ல் இந்தியாவை சேர்த்தால் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என்று சீனா கூறி வருகிறது. கடந்த ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற என்.எஸ்.ஜி ஆண்டுக் கூட்டத்தில் இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பதில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பதில்லை என்ற முடிவில் சீனா உள்ளிட்ட சில நாடுகள் உறுதியாக இருந்தன.

  இதனால், இந்தியாவின் என்எஸ்ஜி உறுப்பினர் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. என்எஸ்ஜி-யில் உறுப்பினர்களாக உள்ள 48 நாடுகளும் ஆதரித்தால் மட்டும் புதிதாக ஒரு நாட்டை உறுப்பினராக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் அடுத்த மாதம் என்.எஸ்.ஜி கூட்டம் நடைபெறவுள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் இந்தியாவை என்.எஸ்.ஜி-யில் சேர்ப்பது குறித்த தனது நிலைப்பாட்டை சீனா மாற்றிக் கொள்ளவில்லை. எனவே, இந்த ஆண்டும் இந்தியா என்.எஸ்.ஜி-யில் உறுப்பினராக வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஆனால், இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக துருக்கி உறுதியளித்துள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கும் ஆதரவு அளிப்பதாக அந்நாடு கூறியுள்ளது. 
  Next Story
  ×