search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரானில் பதவியை தக்க வைத்த அதிபர் ரவுஹானிக்கு மோடி வாழ்த்து: நல்லுறவை வலுப்படுத்த உறுதி
    X

    ஈரானில் பதவியை தக்க வைத்த அதிபர் ரவுஹானிக்கு மோடி வாழ்த்து: நல்லுறவை வலுப்படுத்த உறுதி

    ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பதவியை தக்க வைத்துக்கொண்ட ஹசன் ரவுஹானிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஈரான் நாட்டின் அதிபர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் ஹசன் ரவுஹானி (68) மற்றும் இப்ராகிம் ராய்சி (56) ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தெர்தலில் மொத்தம் 70 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் 58.6 சதவிகிதம் வாக்குகளை பெற்ற ரவுஹானி வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இப்ராகிம் ராய்சி 39.8 சதவிகித வாக்குகளை பெற்று தோல்வியை சந்தித்தார்.

    வெற்றி பெற்ற அதிபர் ரவுஹானிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.



    ‘மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எனது நண்பர், ஜனாதிபதி ஹசன் ரவுஹானிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்’ என டுவிட்டரில் ஆங்கிலம் மற்றும் பாரசீக மொழிகளில் வாழ்த்து தெரிவித்துள்ளார் மோடி.

    மேலும், ‘ஈரானுடன் உள்ள சிறப்பு நல்லுறவை வலுப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது. ஜனாதிபதி ரவுஹானின் சக்திவாய்ந்த தலைமையின் கீழ், புதிய உச்சத்தை அடைவதற்கு ஈரான் தொடர்ந்து முன்னேறும்’ என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×