என் மலர்

  செய்திகள்

  ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்,ஏட்டு கைது
  X

  ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்,ஏட்டு கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  பெங்களூரு:

  பெங்களூரு கோனனகுண்டே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சீனிவாஸ். அதே போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் வெங்கடேஷ்.

  இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் வீட்டில் காசோலைகள் திருட்டுப் போனது. இதுதொடர்பாக அந்த ஒப்பந்ததாரர் அளித்த புகாரின்பேரில் 3 பேர் மீது இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

  இந்த நிலையில், இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஒருவருடைய உறவினர், இன்ஸ்பெக்டர் சீனிவாசை சந்தித்தார்.

  அப்போது அந்த நபர், இவ்வழக்கில் இருந்து தன்னுடைய உறவினரை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அதற்கு அந்த நபரும் ஒப்புக்கொண்டார்.

  ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இதுகுறித்து ஊழல் தடுப்பு படையில் புகார் செய்தார். அவர்கள் அளித்த அறிவுரையின்படி நேற்று இரவு கோனனகுண்டே போலீஸ் நிலையத்தில் வைத்து ரூ.25 ஆயிரம் லஞ்சப் பணத்தை இன்ஸ்பெக்டர் சீனிவாசிடம், அந்த நபர் கொடுத்தார்.

  அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு படை போலீசார் இன்ஸ்பெக்டர் சீனிவாசை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த போலீஸ் ஏட்டு வெங்கடேசையும் கைது செய்தனர்.

  தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×