என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் பெண் நக்சலைட் கொல்லப்படார்
Byமாலை மலர்19 Feb 2017 11:50 AM GMT (Updated: 19 Feb 2017 11:50 AM GMT)
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் தடை செய்யப்பட்ட நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த பெண் சுட்டுக் கொல்லப்படார்.
ராய்ப்பூர்:
ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கன்ட், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பணம் படைத்தவர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் இந்த குழுவினர் அவ்வப்போது போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரையும் தாக்கிக் கொல்கின்றனர்.
தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த இந்த குழுவினரை வேட்டையாட நக்சல் ஒழிப்பு படை என்ற தனிப்படை பிரிவு இயங்கி வருகிறது. காட்டுப் பகுதிகளில் மறைந்திருக்கு நக்சலைட்களையும், மாவோயிஸ்ட்களையும் இந்த தனிப்படையினர் கைது செய்தும், சுட்டுக் கொன்றும் வருகின்றனர்.
அவ்வகையில், சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கவர்கட்டா காட்டுப்பகுதியில் சில நகசலைட்கள் பதுங்கி இருப்பதாக மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த நக்சல் ஒழிப்பு சிறப்பு படையினரின் துணையுடன் இன்று காலை அந்த காட்டுப்பகுதியை போலீசார் சுற்றிவளைத்தனர். போலீஸ் படையை கண்ட நக்சலைட்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
போலீசாரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் யார்? என்பது இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் அந்தப் பெண்ணின் உடலை தெலுங்கானா மாநிலத்துக்கு கொண்டு செல்ல போலீசார் தீர்மானித்துள்ளனர்.

Next Story
×