search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே பா.ஜ.க.வின் நோக்கம் - மாயாவதி தாக்கு
    X

    இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே பா.ஜ.க.வின் நோக்கம் - மாயாவதி தாக்கு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு கிடைக்கும் சலுகைகளும், இடஒதுக்கீடும் இல்லாமல் போகும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.  முதல் கட்டமாக தேர்தல் நடக்கும் தொகுதிகளில், அக்கட்சியின் தலைவர் மாயாவதி சுற்றுப் பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், ஹாத்ராஸ் நகரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மாயாவதி, பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசியதாவது:-

    உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் பட்சத்தில் சிறுபன்மையினர் மற்றும் தலித்துக்கள் மீதான தாக்குதல் அதிகரிக்கும். அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளும், இட ஒதுக்கீடும் பறிபோகும் சூழ்நிலை ஏற்படும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகளைத்தான் பா.ஜ.க பின்பற்றிவருகிறது. முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், மும்முறை தலாக், பொது சிவில் சட்டம் என சர்ச்சைக்குரிய விஷயங்களிலேயே பா.ஜ.க கவனம் செலுத்தி வருகிறது.

    போலி கருத்துக் கணிப்புகளை நடத்தி தங்களுக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக நாடகமாடுகின்றனர். எதிர்க்கட்சியினரைப் பற்றி தவறான செய்திகளை ஊடகங்கள் மூலம் பரப்புகின்றனர். 

    இவ்வாறு மாயாவதி பேசினார்.
    Next Story
    ×