search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதுநிலை மருத்துவ படிப்பு: 5 ஆயிரம் இடங்கள் அதிகரிப்பு
    X

    முதுநிலை மருத்துவ படிப்பு: 5 ஆயிரம் இடங்கள் அதிகரிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிறப்பு மருத்துவ நிபுணர்களை உருவாக்க முதுநிலை மருத்துவ படிப்புக்கு 5 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்படும் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியபோது, “இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை சுகாதார நலனை மேம்படுத்துகிற வகையில், போதுமான அளவுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்” என கூறினார்.

    அந்த வகையில், சிறப்பு மருத்துவ நிபுணர்களை உருவாக்க ஏற்ற விதத்தில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு 5 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்படும் என அறிவித்தார்.

    பெரிய மாவட்ட ஆஸ்பத்திரிகளில் டி.என்.பி., படிப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

    சுகாதார துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.47 ஆயிரத்து 352 கோடியே 51 லட்சமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் 100 இந்திய சர்வதேச திறன் மையங்கள் நிறுவப்படும். அவை, அன்னிய மொழிகளில் மேம்பட்ட பயிற்சி, அன்னிய மொழி படிப்புகள் வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கும். மேலும் வெளிநாடுகளில் வேலை தேட விரும்புகிற இளைய தலைமுறையினருக்கு உதவிகரமாகவும் இருக்கும்.
    Next Story
    ×