என் மலர்

  செய்திகள்

  பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலின்போது திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது
  X

  பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலின்போது திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் தினமான பிப்ரவரி 1-ம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  பல்வேறு பிரச்சனைகளில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளைதொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாளை நடைபெறும் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார்.

  இந்த ஆண்டு முதல் முறையாக ரெயில்வே பட்ஜெட் ரத்து செய்யப்பட்டு, அது மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கப்படுகிறது. பட்ஜெட் திட்டங்களை அடுத்த நிதியாண்டின் (2017- 2018) முதல் நாளிலேயே (ஏப்ரல் 1-ந் தேதி) தொடங்குவதற்கு வசதியாக மத்திய அரசு முன்கூட்டியே, பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.

  எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மோடி அரசுக்கு வழக்கம்போல் சவால் மிகுந்ததாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பட்ஜெட்டை மத்திய அரசு முன்கூட்டியே தாக்கல் செய்வதன் மூலம் பல்வேறு மறைமுக சலுகைகளை இந்த மாநிலங்களுக்கு அறிவிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

  இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் (பிப்ரவரி 1) திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வர மாட்டார்கள் என தெரிவித்துள்ளது. இன்று மாலையில் நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திலும் அக்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள்.

  ரோஸ் வேலி நிதி நிறுவன ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய எம்.பி.க்கள் இரண்டு பேரை சி.பி.ஐ. கைது செய்ததால் மத்திய அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளது அக்கட்சி. இதன் காரணமாகவே பட்ஜெட்டை புறக்கணிப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

  ஆனால், பிப்ரவரி 1-ம்தேதி மேற்கு வங்காளத்தின் முக்கிய பண்டிகையான சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவதால் அன்றையதினம் பாராளுமன்ற நடவடிக்கையில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது என அக்கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவர் டெரிக் ஓ பிரையன் கூறியுள்ளார்.

  ‘சரஸ்வதி பூஜையானது மத பண்டிகைக்கு அப்பாற்பட்டது. இது வங்காளத்தின் சமூக-கலாச்சார திருவிழா ஆகும். கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் இன்று மாலை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திலும் பங்கேற்க இயலாது’ என்றும் பிரையன் தெரிவித்தார்.
  Next Story
  ×