என் மலர்

  செய்திகள்

  ரெயில் கட்டண சலுகைக்கு ஆதார் அட்டை கட்டாயம்: மத்திய அரசு பரிசீலனை
  X

  ரெயில் கட்டண சலுகைக்கு ஆதார் அட்டை கட்டாயம்: மத்திய அரசு பரிசீலனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரெயில் கட்டணங்களில் சலுகை பெற ஆதார் அட்டையைக் கட்டாயமாக்க மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.

  புதுடெல்லி, ஜன. 30-

  ரெயில் பயணச் சலுகை திட்டங்களை முறை கேடாக பயன்படுத்து கிறார்கள் என்று பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந் துள்ளது.

  அந்த முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று மத்திய அரசு தீவிர மாக ஆலோசனை நடத்தி வருகிறது.

  தற்போது மத்திய அர சின் அர்ஜுனா விருது பெற்ற வர்கள், மூத்த குடிமக்கள், ஆராய்ச்சியாளர்கள், டாக் டர்கள், நோயாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்பட சுமார் 50 வகையைச் சேர்ந்தவர்களுக்கு ரெயில் பயண கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. சில பிரிவினருக்கு பயணக் கட்டண சலுகை அதிக அளவில் வழங்கப்படுகிறது.

  இதன் காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ஆண்டு நிதி இழப்பு அதிகரித்து வருகிறது. 2015-16ம் நிதி யாண்டில் மட்டும் ரெயில் பயண கட்டண சலுகை கொடுத்ததில் ரூ.1600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

  ரெயில் பயண கட்டண சலுகையை பெரும்பாலும் மூத்த குடிமக்களே பெற்று வருகிறார்கள். இதில் முறைகேடு நடப்பது தடுக்க முடியாதபடி உள்ளது.

  எனவே இனி ரெயில் கட்டணங்களில் சலுகை பெற ஆதார் அட்டையைக் கட்டாயமாக்க மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. நாளை மறுநாள் (1-ந்தேதி) பாராளு மன்றத்தில் தாக்கல் செய்யப் படும் மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.

  Next Story
  ×