என் மலர்

    செய்திகள்

    டெல்லி குடியரசு தினவிழாவில் நடந்த அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகத்துக்கு 3-ம் பரிசு
    X

    டெல்லி குடியரசு தினவிழாவில் நடந்த அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகத்துக்கு 3-ம் பரிசு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டெல்லி குடியரசு தின விழாவில் நடந்த அலங்கார ஊர்தி அணி வகுப்பில் பங்கேற்ற தமிழக அலங்கார ஊர்திக்கு 3-ம் பரிசு கிடைத்து உள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி குடியரசு தின விழாவில் நடந்த அலங்கார ஊர்தி அணி வகுப்பில் பங்கேற்ற தமிழக அலங்கார ஊர்திக்கு 3-ம் பரிசு கிடைத்து உள்ளது.

    குடியரசு தினத்தையொட்டி கடந்த 26-ந்தேதி டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடி ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மாநிலங்கள் சார்பிலும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. குடியரசு தினவிழா அணிவகுப்பில் சிறப்பாக செயல்படும் படைப்பிரிவு மற்றும் அலங்கார ஊர்திகளுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அத்துடன் சிறந்த கலைநிகழ்ச்சிகளை வழங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சிறப்பு சேர்த்தவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதில் சிறந்த அணிவகுப்பை வழங்கிய ராணுவத்தின் ‘மெட்ராஸ் என்ஜினீயர் குழு’வுக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. துணை ராணுவ பிரிவில் சிறந்த அணிவகுப்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) தேர்வு செய்யப்பட்டது.

    மாநிலங்களின் கலாசாரம், பண்பாட்டை எடுத்துக்கூறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் முதல் பரிசை அருணாசல பிரதேச மாநிலமும், 2-வது பரிசை திரிபுரா மாநிலமும் தட்டிச்சென்றுள்ளன. 3-வது பரிசு தமிழகம் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு கூட்டாக வழங்கப்பட்டது.

    நாட்டுப்புற நடனங்களுள் ஒன்றான கரகாட்டத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்த தமிழக அலங்கார ஊர்தியில், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட அம்மன் சிலை முன்பு 12 பெண் நடனக் கலைஞர்களும், 6 ஆண் நடனக் கலைஞர்களும், கிராமியப் பாடலுக்கேற்றார்போல் நடனமாடியது பார்வையாளர்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்து.

    மத்திய அமைச்சகங்கள் சார்பில் அணிவகுத்த அலங்கார ஊர்திகளில், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு கிடைத்து உள்ளது. ‘திறன் மேம்பாடு வழியாக மாற்றமடையும் இந்தியா’ என்ற தலைப்பின் கீழ் இந்த ஊர்தி வடிவமைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் ‘பசுமை இந்தியா-தூய்மை இந்தியா’ என்ற தலைப்பின் கீழ் உருவாக்கப்பட்டு இருந்த பொதுப்பணித்துறையின் அலங்கார ஊர்தி, நடுவர்களின் சிறப்பு பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

    பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் பிரிவில் டெல்லி பிதம்புராவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் அரங்கேற்றிய தேசிய கொடி நடனம் முதல் பரிசை வென்றது.

    அலங்கார ஊர்தியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாநிலங்களுக்கு பரிசு வழங்கும் விழா, இந்திய ராணுவ முகாமில் அமைந்துள்ள ராஷ்டிரிய ரெங்குசாலா கலையரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

    இவ்விழாவில் தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்திக்கான பரிசு மற்றும் சான்றிதழை, மத்திய ராணுவ இணை மந்திரி சுபாஷ் பாம்ரே வழங்க, தமிழக அரசின் சார்பில், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குனர் உல.ரவீந்திரன் பெற்றுக்கொண்டார்.

    Next Story
    ×