என் மலர்

  செய்திகள்

  ஆம் ஆத்மியை டெல்லிக்கே திருப்பி அனுப்புங்கள்: பஞ்சாபில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்
  X

  ஆம் ஆத்மியை டெல்லிக்கே திருப்பி அனுப்புங்கள்: பஞ்சாபில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆம் ஆத்மியை டெல்லிக்கே திருப்பி அனுப்புங்கள். அவர்கள் டெல்லியில் அளித்த வாக்குறுதிகளை முதலில் காப்பாற்ற சொல்லுங்கள் என்று பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார்.
  சண்டிகார்:

  ஆம் ஆத்மியை டெல்லிக்கே திருப்பி அனுப்புங்கள். அவர்கள் டெல்லியில் அளித்த வாக்குறுதிகளை முதலில் காப்பாற்ற சொல்லுங்கள் என்று பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார்.

  பஞ்சாப் சட்டசபை தேர்தலையொட்டி, அம்மாநிலத்தில் கோட்காபுரா நகரில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

  பஞ்சாப் தேர்தலில், வெளியில் இருந்து வந்த ஒரு கட்சி (ஆம் ஆத்மி) போட்டியிடுகிறது. அக்கட்சி, பஞ்சாபை பலி கொடுத்து, தனது சொந்த உலகத்தை படைக்க விரும்புகிறது.

  அந்த கட்சி டெல்லியில் அளித்த வாக்குறுதிகள் என்ன? அவற்றை நிறைவேற்றிவிட்டதா என்று முதலில் கேளுங்கள். அது எங்கிருந்து வந்ததோ, அந்த டெல்லிக்கே அக்கட்சியை திருப்பி அனுப்புங்கள்.

  பஞ்சாப் மாநிலம், பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. பஞ்சாப் மண்ணை பயன்படுத்தி, இந்தியாவை அழிக்க பாகிஸ்தான் தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

  இந்த நேரத்தில், வெளிநபர்களின் கட்சியோ, உல்லாச வாழ்க்கை வாழ்பவர்களின் கட்சியோ இங்கு ஆட்சிக்கு வந்தால், அது நாட்டுக்கே பலத்த பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும். அந்த அளவுக்கு பஞ்சாபின் தலைவிதி, நாட்டின் தலைவிதியுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இதை மனதில் கொண்டு ஓட்டுப்போட வேண்டும்.

  தேர்தல் கமிஷனையே நான் இயக்குவதாக ஒரு கட்சி (ஆம் ஆத்மி) குற்றம் சாட்டியுள்ளது. நான் சமீபத்தில் கோவா மாநிலத்துக்கு சென்றேன். அங்கு தங்களுக்கு தோல்வி உறுதி என்பதை உணர்ந்து கொண்ட அக்கட்சி, தேர்தல் கமிஷனை நான் இயக்குவதாக கூறியது.

  அவர்களை பொறுத்தவரை, தேர்தல் கமிஷன் பயனற்றது. அப்படி தேர்தல் கமிஷன் செய்த தவறு என்ன? முதலில், பஞ்சாபுக்கும், கோவாவுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்துவது. இரண்டாவது, முதல் கட்டத்திலேயே இரு மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்துவது. மூன்றாவது, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது. இவற்றால், தங்கள் கட்சி தோல்வி அடையும் என்று அவர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், டெல்லியில் அவர்களின் செயல்பாட்டால், அவர்களுக்கு தோல்வி நிச்சயம்.

  பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாதம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, ஒவ்வொரு சீக்கியரையும் ‘பயங்கரவாதி’ என்று காங்கிரஸ் அரசு முத்திரை குத்தியது. இப்போது அக்கட்சி, ஒவ்வொரு பஞ்சாப் இளைஞரையும் போதை மருந்துக்கு அடிமையானவர் என்று முத்திரை குத்த பார்க்கிறது.

  போதைப்பொருள் பிரச்சினையை கூட்டு நடவடிக்கை மூலம்தான் முறியடிக்க வேண்டும். இப்படி குற்றம் சாட்டுவதால், பிரச்சினை தீர்ந்து விடுமா? பிற மாநில மக்கள், பஞ்சாப் இளைஞர்களை சந்தேகத்துடன் பார்க்கவே இது வழிவகுக்கும்.

  எனவே, வளர்ச்சி திட்டங்கள் தொடர அகாலிதளம்-பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

  இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

  Next Story
  ×