search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்கள் பள்ளித்தேர்வை திருவிழாவாக கொண்டாடவேண்டும்: பிரதமர் மோடி வானொலி உரை
    X

    மாணவர்கள் பள்ளித்தேர்வை திருவிழாவாக கொண்டாடவேண்டும்: பிரதமர் மோடி வானொலி உரை

    மாணவர்கள் தேர்வு குறித்து கவலைபட வேண்டாம், அது கொண்டாடப்படவேண்டிய காலம் என பிரதமர் மோடி வானொலி உரையில் தெரிவித்தார்.
    சென்னை:

    பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் வானொலியில் “மன் கி பாத்” (மனதின் குரல்) என்ற தலைப்பில் உரையாற்றி வருகிறார். இன்று வானொலியில் அவர் 28-வது முறையாக உரையாற்றினார். அப்போது கூறியதாவது:-

    குடியரசு தின விழாவில் விருது பெற்றவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.

    காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த நமது வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    நாளை காந்தி நினைவு தினத்தையொட்டி நாட்டு மக்கள் 2 நிமிடம் மவுனம் கடைப்பிடிக்க வேண்டும்.

    தியாகிகளைப்பற்றி இளைஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

    மாணவர்கள் தேர்வு குறித்து கவலைபட வேண்டாம். அது கொண்டாடப்படவேண்டிய காலம். தேர்வு காலத்தை கொண்டாட்ட தருணமாக கருத வேண்டும். விளையாட்டுடன் இணைந்த கல்வியாக இருக்க வேண்டும். எப்போதும் புன் சிரிப்புடன் மேலும் மேலும் முன்னேற்றத்தை எட்ட வேண்டும்.

    தேர்வுகளில் மறு சீரமைப்பு தேவை. தேர்வுகள் பெஞ்சுகளில் மதிப்பெண்கள் மட்டுமே போடுவது என்று இருக்ககூடாது. அறிவுப் பூர்வமான கல்வியாக இருக்கவேண்டும். ஒருவருக்கொருவர் போட்டி போட வேண்டும். எதிர்பார்ப்புகள் தான் பிரச்சினை. அப்துல் கலாமின் சாதனைகளை நினைவில் கொள்ள வேண்டும்.

    கடினமாக உழைத்து புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்க வேண்டும். மதிப்பெண்களுக்காக படிக்க கூடாது, அறிவை வளர்க்க கல்வியை பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
    Next Story
    ×