என் மலர்
செய்திகள்

100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பலனடைய ஏப்ரல் முதல் ஆதார் எண் கட்டாயமாகிறது
கிராமப்புறவாசிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் முக்கியத் திட்டமான 100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் அல்லது 100 நாள் வேலை உறுதித் திட்டம், 2005-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு கூலியாக குறைந்தபட்சம் 170 ரூபாய் அளிக்கப்படுகிறது. இந்த தொகையை ஒவ்வொரு மாநிலமும் அதன் நிதி நிலைமைக்கேற்ப அதிகமாக வழங்கிவருகிறது.
தற்போது, இந்த பணிக்கு ஏப்ரல் மாதம் முதல் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்திருப்பவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 12 இலக்க அடையாள எண் அல்லது தற்போது பயன்படுத்தி வரும் வேறு வகையான அரசு அடையாள அட்டைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆதார் அட்டை விரைந்து வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கேஸ் சிலிண்டர் மானியம், முதியோர் பென்சன் உள்பட பல திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story