என் மலர்

  செய்திகள்

  சத்தீஷ்கரில் போலீசாரால் கற்பழிக்கப்பட்ட 16 பெண்கள்: மனித உரிமை கமி‌ஷன் நோட்டீஸ்
  X

  சத்தீஷ்கரில் போலீசாரால் கற்பழிக்கப்பட்ட 16 பெண்கள்: மனித உரிமை கமி‌ஷன் நோட்டீஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்தீஷ்கர் மாநிலத்தில் 16 பெண்களை போலீசார் கற்பழித்ததாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளிக்குமாறு அம்மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  புதுடெல்லி:

  சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்தியப் படை போலீசாரும், மாநில போலீசாரும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் மாநில போலீசார் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  கடந்த 2016-ம் ஆண்டில் சத்தீஷ்கர் மாநில போலீசார் பல்வேறு சம்பவங்களின் போது பெண்களை கற்பழிக்கும் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தில் போலீசாரால் 34 பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை போலீசார் கற்பழித்தல், பலாத்காரம் செய்தல், அடித்து உதைத்து தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

  இது தொடர்பாக மனித உரிமை கமி‌ஷன் தாமாகவே முன் வந்து விசாரணை நடத்தியது. 34 பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டதில் 16 பெண்கள் மட்டுமே கற்பழிக்கப்பட்டு இருப்பதும் மற்றவர்கள் பலாத்காரம், தாக்குதல் போன்றவற்றில் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

  பல்வேறு சம்பவங்களில் மாநில போலீசாரும் குற்றச் செயலில் ஈடுபட்ட போலீசார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

  பாதிக்கப்பட்ட பெண்களிடம் மனித உரிமை கமி‌ஷன் பிரதிநிதிகள் நேரில் விசாரணை நடத்தி அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் மனித உரிமை கமி‌ஷனும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.

  இது தொடர்பாக மாநில அரசிடம் விளக்கம் கேட்டு மனித உரிமை கமி‌ஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தலைமைச் செயலாளர் மூலம் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

  பாதிக்கப்பட்டவர்களில் 8 பெண்களுக்கு தலா ரூ.3 லட்சமும், மற்ற 6 பெண்களுக்கு தலா ரூ.2 லட்சமும், போலீசாரால் தாக்கப்பட்டு காயம் அடைந்த 2 பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மனித உரிமை கமி‌ஷன் பரிந்துரை செய்துள்ளது.
  Next Story
  ×