என் மலர்

  செய்திகள்

  பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவின் ஜெர்கின் அங்கியை பரிசாக பெற்ற பிரதமர் மோடி
  X

  பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவின் ஜெர்கின் அங்கியை பரிசாக பெற்ற பிரதமர் மோடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போர்ச்சுகல் பிரதமர் ஓர்லாண்டோ கோஸ்டோ, பிரபல கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ வழக்கமாக அணியும் 7-ம் எண் கொண்ட ஜெர்கின் அங்கியை அவருக்கு பரிசாக அளித்து மகிழ்ந்தார்.
  புதுடெல்லி:

  போர்ச்சுக்கல் நாட்டின் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா ஏழு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார்.

  ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

  இதற்கிடையில், டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஓர்லாண்டோ கோஸ்டோ, போர்ச்சுகல் நாட்டின் பிரபல கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ வழக்கமாக அணியும் 7-ம் எண் கொண்ட ஜெர்கின் அங்கியை அவருக்கு பரிசாக அளித்து மகிழ்ந்தார்.

  அந்த அங்கியில் ரொனால்டோவின் கையொப்பம் இடப்பட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×