என் மலர்

  செய்திகள்

  உ.பி தேர்தல்: வேட்பாளர்கள், தலைவர்களுடன் மாயாவதி அவசர ஆலோசனை
  X

  உ.பி தேர்தல்: வேட்பாளர்கள், தலைவர்களுடன் மாயாவதி அவசர ஆலோசனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
  லக்னோ:

  உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. முக்கிய எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, மொத்தமுள்ள 403 தொகுதிகளில் இதுவரை 300 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மூன்றுகட்டங்களாக அறிவித்துள்ளது.

  இந்நிலையில், லக்னோ நகரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமையகத்தில் இன்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் 300 வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

  வரும் தேர்தலில் வெற்றிபெற தொண்டர்கள் எப்படி செயல்பட வேண்டும்?, வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவது, தேர்தல் செலவுகள், மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்வது போன்ற ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
  Next Story
  ×