என் மலர்

  செய்திகள்

  உ.பி. சட்டசபைத் தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
  X

  உ.பி. சட்டசபைத் தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
  லக்னோ:

  உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பு அடைந்துள்ன. முக்கிய எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் தனித்து களமிறங்குகிறது, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் அக்கட்சி தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  லக்னோவில் இன்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி, 100 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இந்தப் பட்டியலானது இரண்டாம் கட்டமாக தேர்தல் நடக்கும் லக்னோ உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலுக்கானதாகும். அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  தேர்தல் தேதி நெருங்குவதால் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பிரச்சார திட்டம் போன்ற பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
  Next Story
  ×