search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்கண்டேய கட்ஜு நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்று கோர்ட் அவமதிப்பு வழக்கு தள்ளுபடி
    X

    மார்கண்டேய கட்ஜு நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்று கோர்ட் அவமதிப்பு வழக்கு தள்ளுபடி

    சவுமியா கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதித்துறைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, தனது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதையடுத்து அவர் மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    கேரளாவில் ஓடும் ரெயிலில் இருந்து இளம்பெண்ணை கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 7 ஆண்டு சிறைத்தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பரில் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் தரப்பில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதற்கிடையே, இவ்விவகாரத்தில் தனது வலைப்பக்கத்தில் (பிளாக்) சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை வசைபாடியதாக முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மார்கண்டேய கட்ஜுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

    இதையடுத்து, சுப்ரீம் கோட்டில் நேரில் ஆஜராகி கட்ஜு தன்னிலை விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், இவ்விவகாரத்தில் நீதித்துறையை முன்னர் விமர்சித்தமைக்காக சுப்ரீம் கோர்ட்டிடம் மார்கண்டேய கட்ஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருந்தார்.

    இதை சுப்ரீம் கோர்ட்டும் இன்று ஏற்றுகொண்டதையடுத்து, அவர்மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
    Next Story
    ×