search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோம்பேறி குழந்தையான பிரதமருக்கு பாடம் கற்பித்தார் குடும்ப தலைவர் ஜனாதிபதி
    X

    சோம்பேறி குழந்தையான பிரதமருக்கு பாடம் கற்பித்தார் குடும்ப தலைவர் ஜனாதிபதி

    ரூபாய் நோட்டு விவகாரத்தில் சோம்பேறி குழந்தையான பிரதமருக்கு குடும்ப தலைவர் ஜனாதிபதி பாடம் கற்பித்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ம் தேதி உயர் மதிப்பிலான 500  மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது.

    ரூபாய் நோட்டு ரத்து அறிவிப்பு வெளியானது முதல் நாட்டில் கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. அரசு விதித்த டிசம்பர் 30-ம் தேதி முடிந்த பிறகும் நிலைமை சீராகவில்லை.

    இதனையடுத்து, ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து இன்று கருத்து தெரிவித்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இந்த நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தில் தற்காலிக மந்த நிலையை ஏற்படுத்தும் என்று கூறினார்.

    இந்நிலையில், ரூபாய் நோட்டு விவகாரத்தில் சோம்பேறி குழந்தையான பிரதமருக்கு குடும்ப தலைவர் ஜனாதிபதி பாடம் கற்பித்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    இதுகுறித்துக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜவாலா கூறியதாவது:

    ஜனாதிபதி தற்போது உண்மையை பிரதமர் மோடிக்கும், அவரது அரசுக்கும் எடுத்துக் காட்டியுள்ளார். ஜனாதிபதி பேசியுள்ளதை, பிரதமர் மோடி கேட்பாரா? தனது அதிகார திமிரை கைவிடுவாரா? இழப்புகளை ஈடு செய்வாரா?.

    குடும்பத்தின் தலைவர் சோம்பேறி குழந்தைக்கு பாடம் கற்பிப்பார். அதுபோன்ற பாடத்தை தான் ஜனாபதி வழங்கியுள்ளார்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    முன்னதாக இந்த விவகாரம் குறித்து பேசிய ஜனாதிபதி, ”ரூபாய் நோட்டு விவகாரம் கருப்பு பணத்தை ஒழிக்கவும், ஊழலை எதிர்க்கவும் பயன்பட்டாலும், இந்திய பொருளாதாரத்தில் தற்காலிக மந்த நிலையை ஏற்படுத்தும். ரூபாய் நோட்டு விவகாரம் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு வரவேற்கிறேன். இந்த தருணத்தில் ஏழை மக்களின் துயர நிலையை போக்க நாம் அனைவரும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்” என்று கூறி இருந்தார்.
    Next Story
    ×