search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் தற்கொலை: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
    X

    விவசாயிகள் தற்கொலை: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

    ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால் போதிய தண்ணீர் இல்லாமல் விவசாய விளைநிலங்களில் பயிரிடப்பட்ட நெல், வாழை மற்றும் மானாவரி பயிர்கள் கருகிவிட்டது. அதனை கண்ட பல விவசாயிகள் மன வேதனை அடைந்து மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

    நாகை, திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ஊடகங்களிலும் விவசாயிகள் தற்கொலை குறித்து தீவிரமான விவாதமும் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், தொடர்ந்து நிகழும் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஒரு மாதத்தில் 106 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து தமிழக செயலாளர் 6 வாரங்களுக்கு பதிலளிக்குமாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாக கொண்டு தாமாக முன் வந்து தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரத்தை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×