என் மலர்

  செய்திகள்

  3 நாள் பயணமாக காஷ்மீர் சென்றார் புதிய ராணுவ தளபதி பிபின் ராவத்
  X

  3 நாள் பயணமாக காஷ்மீர் சென்றார் புதிய ராணுவ தளபதி பிபின் ராவத்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள பிபின் ராவத் மூன்று நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார்.
  ஸ்ரீநகர்:

  இந்திய ராணுவத்தின் 27–வது தளபதியாக பிபின் ராவத், டெல்லி தெற்கு பிளாக்கில் உள்ள அலுவலகத்தில் முறைப்படி டிசம்பர் 31-ம் தேதி(சனிக்கிழமை) பதவி ஏற்றார். அவரிடம் பணி நிறைவு செய்த தல்பீர் சிங் சுஹாக் பொறுப்பை ஒப்படைத்தார்.

  13 லட்சம் வீரர்களை கொண்ட இந்திய ராணுவத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்றுள்ள பிபின் ராவத் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.

  இந்நிலையில், பிபின் ராவத் தனது அதிகாரப்பூர்வ முதல் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார். மூன்று நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ள ராவத், அங்கு உதம்பூர், ஸ்ரீநகர், நக்ரோடா மற்றும் சியாசின் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறார்.

  தனது பயணத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
  Next Story
  ×