என் மலர்

  செய்திகள்

  மாணவர்களுக்கு கட்டணம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும்: சந்திரசேகர ராவ்
  X

  மாணவர்களுக்கு கட்டணம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும்: சந்திரசேகர ராவ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாணவர்களுக்கு கட்டணம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார்.
  ஐதராபாத்: 
  தெலுங்கானா சட்டசபையில் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு வழங்கும் திட்டம் தொடர்பாக இன்று விவாதிக்கப்பட்டது. விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மாணவர்களுக்கு கட்டணம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் என வலியுறுத்தினார். 

  இந்த திட்டத்தின்கீழ் மொத்தம் 4687 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், நிலுவையிலுள்ள கட்டணத் தொகையை மிக விரைவில் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

  முந்தய காங்கிரஸ் அரசு ரூபாய் 1800 கோடி வழங்காமல் விட்டுவிட்டதாகவும், தற்போதய அரசு அதையும் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோபமடைந்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உறுப்பினர்களுடன் வாக்குவாதம் செய்தனர். மேலும் முதலமைச்சரின் பதில் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி அமளியிலும் ஈடுபட்டனர்.
  Next Story
  ×