என் மலர்

  செய்திகள்

  புனே பேக்கரியில் தீ விபத்து: தூங்கிக் கொண்டிருந்த 6 பேர் மூச்சுத் திணறி சாவு
  X

  புனே பேக்கரியில் தீ விபத்து: தூங்கிக் கொண்டிருந்த 6 பேர் மூச்சுத் திணறி சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புனேயில் உள்ள பேக்கரியில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
  புனே:

  மராட்டிய மாநிலம் புனே நகரின் கொண்ட்வா எனும் பகுதியில் பேக்ஸ் இன் ஜேக்ஸ் எனும் பேக்கரி உள்ளது. அந்த பேக்கரியில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

  அப்போது கடைக்குள் தூங்கிக் கொண்டிருந்த 6 பேர் புகை மூட்டத்தில் சிக்கினார்கள். அவர்கள் மூச்சு திணறி உயிரிழந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

  இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட பேக்கரியின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழக்க நேர்ந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
  Next Story
  ×