search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூர் அருகே விபரீதம்: லாரிகளில் இருந்த 900 கியாஸ் சிலிண்டர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின
    X

    பெங்களூர் அருகே விபரீதம்: லாரிகளில் இருந்த 900 கியாஸ் சிலிண்டர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின

    கர்நாடக மாநிலம், சிக்பல்லாப்புரா மாவட்டத்தில் இரு லாரிகளில் இருந்த 900-க்கு அதிகமான கியாஸ் சிலிண்டர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    பெங்களூர்:

    கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிக்பல்லாப்புரா மாவட்டத்தில் சிந்தாமணி என்ற சிறுநகரம் அமைந்துள்ளது.

    இந்த நகரில் உள்ள ஒரு சாலையோரம் நேற்றிரவு எரிவாயு சிலிண்டர் ஏற்றப்பட்ட இரு லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றில் ஒரு லாரியின் பேட்டரியில் இருந்து நேற்று பின்னிரவு திடீரென கிளம்பிய தீப்பொறிபட்டு அதில் இருந்த சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

    வெடித்த சிலிண்டர்களில் இருந்து கிளம்பிய தீப்பிழம்பு அருகாமையில் இருந்த லாரியின் மீது விழுந்ததில் அதிலிருந்த அனைத்து சிலிண்டர்களும் அடுத்தடுத்து வெடித்து சிதறின. அருகாமையில் நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு வேனும் தீக்கிரையானது. இரு லாரிகளிலும் 900-க்கும் அதிகமான சிலிண்டர்கள் உள்ளதாக தெரிகிறது.

    தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் இந்த கோர விபத்து தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

    நல்லவேளையாக, குடியிருப்பு பகுதிகள் ஏதுமில்லாத இடத்தில் அந்த லாரிகள் நிறுத்தப்பட்டிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×