search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு விவகாரம் - அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும்: பா.ஜ.க. முன்னாள் எம்.பி.
    X

    ரூபாய் நோட்டு விவகாரம் - அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும்: பா.ஜ.க. முன்னாள் எம்.பி.

    ரூபாய் நோட்டு விவகாரத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. முன்னாள் எம்.பி. கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.
    பாட்னா:

    உயர்மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி அறிவித்தார்.

    கருப்பு பணத்தை ஒழிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள்.

    இதனிடையே, புதிய 2000 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், நாட்டில் கடுமையாக பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் நீண்ட வரிசையில் காத்திருக்கிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரூபாய் நோட்டு விவகாரத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. முன்னாள் எம்.பி.-யும் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவருமான கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.

    பண மதிப்பிழக்க நடவடிக்கையால் பொதுமக்கள் அடைந்து வரும் துன்பத்திற்கு பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
    Next Story
    ×