என் மலர்

  செய்திகள்

  பெரிய திரை மற்றும் பேட்டரி கொண்ட லெனோவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
  X

  பெரிய திரை மற்றும் பேட்டரி கொண்ட லெனோவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லெனோவோ நிறுவனத்தின் ப்ஹாப் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  இந்தியாவில் பட்ஜெட் விலையில் லெனோவோ பஹாப் 2 எனும் ஸ்மார்ட்போனினை லெனோவோ அறிமுகம் செய்துள்ளது. சிறப்பம்சங்களில் 6.4 இன்ச், 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 3GB ரேம், 32GB இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 128GB வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

  லெனோவோ பஹாப் 2 கேமராக்களை பொருத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் ஃபேஸ் டிடெக்சன் ஃபாஸ்ட் ஆட்டோ ஃபோகஸ் அம்சம் உள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி அம்சமும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  முந்தைய லெனோவோ ஸ்மார்ட்போன்களைப் போன்றே பஹாப் 2 ஸ்மார்ட்போனிலும் டால்பி அட்மாஸ் மற்றும் டால்பி ஆடியோ கேப்ச்சர் 5.1 அம்சம் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4G எல்டிஇ, ப்ளூடூத் 4.0, வைபை வழங்கப்பட்டுள்ளன. இத்தனை சிறப்பம்சங்களுக்கு சக்தியூட்ட சுமார் 4050 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 

  லெனோவோ பஹாப் 2 ஸ்மார்ட்போனின் விற்பனை நாளை மறுநாள் (டிசம்பர் 9) நடைபெறும் என்றும், இது பிளிப்கார்ட் தளத்தில் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெனோவோ பஹாப் 2 இந்தியாவில் ரூ.11,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
  Next Story
  ×