என் மலர்

  செய்திகள்

  அம்பேத்கர் பிறந்தநாள் தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படும்: நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி
  X

  அம்பேத்கர் பிறந்தநாள் தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படும்: நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அம்பேத்கர் பிறந்தநாள் தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி தெரிவித்துள்ளார்.
  புது டெல்லி:

  அம்பேத்கரின் 61-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தேசிய அளவிலான கருத்தரங்கு ஒன்றை மத்திய நீர்வளத்துறை ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி கலந்து கொண்டு உரையாற்றினார்.

  அவர் பேசும்போது "இனி வரும் நாட்களில் தண்ணீர் ஒரு இன்றியமையாத பொருளாக மாறப் போகிறது. டாக்டர். மிகிர் ஷா அறிவுரையின்படி தண்ணீர் குறித்த சீர்திருத்தங்களை கொண்டு வரவேண்டும். அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.

  வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் மக்கள் வசிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை மக்கள் அந்த இடங்களில் வசித்து வந்தால் அவர்களுக்கு வெள்ள பாதிப்பு குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும்” என்றார்.

  மேலும், “தேசிய நீர்வள பாதுகாப்பில் அம்பேத்கரின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு அவரது பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதியை தேசிய தண்ணீர் தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது" என்றும் உமா பாரதி தெரிவித்தார்.
  Next Story
  ×