என் மலர்

  செய்திகள்

  பாராளுமன்றத்துக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை
  X

  பாராளுமன்றத்துக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சனி, ஞாயிறு மற்றும் மிலாடி நபி கொண்டாட்டம் போன்ற காரணங்களால் பாராளுமன்றத்துக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  புது டெல்லி:

  பாராளுமன்றத்தில் இன்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அலுவலகத்தில், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து முக்கிய கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் டிசம்பர் 12-ம் தேதி (திங்கட்கிழமை) பாராளுமன்றத்துக்கு விடுமுறை அளிக்க முடிவெடுக்கப்பட்டது.

  ஏற்கனவே வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களாகும். மிலாடி நபியை முன்னிட்டு 13-ம்தேதி ஏற்கனவே விடுமுறை விடப்பட்டிருந்தது. சில தென் மாநிலங்களில் திங்கட்கிழமை (டிசம்பர் 12) மிலாடி நபி கொண்டாடப்படுவதால், அன்றைய தினமும் பாராளுமன்றத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அலுவல் ஆய்வுக்குழுவில் பங்கேற்ற தலைவர்கள் வலியுறுத்தினர்.

  காங்கிரஸ், பா.ஜ.க. தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியதையடுத்து, டிசம்பர் 12ம் தேதியும் பாராளுமன்றத்திற்கு விடுமுறை அளிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

  முன்னதாக மக்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இக்கோரிக்கையை எழுப்பினர். இதற்கு மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆதரவு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற விவகார மந்திரி ஆனந்த் குமார் பேசும்போது, இதுகுறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×