search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் கலெக்டர்களுக்கு ஊக்கத்தொகை
    X

    டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் கலெக்டர்களுக்கு ஊக்கத்தொகை

    டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
    கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பாரத பிரதமர் மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவி்த்தார். கருப்புப் பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை மட்டும் போதாது. பொதுமக்கள் பண நோட்டுக்கள் பரிவர்த்தனையில் இருந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாற வேண்டும். அப்படி மாறினால்தான் கருப்புப் பணத்தை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று கூறினார்.

    இதனால் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் ‘‘டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவித்தால் ஒரு நபருக்கு ரூ.10 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் 10 சிறந்த கலெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும். மேலும் இத்தகைய நடவடிக்கையை ஊக்குவிக்கும் முதல் 50 பஞ்சாயத்துக்களுக்கும் டிஜிட்டல் பேமெண்ட் விருது வழங்கப்படும்.

    இச்சேவையில் சிறப்பாக பணிபுரியும் 10 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு டிஜிட்டல் பேமெண்ட் சாம்பியன் விருதும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுகள் மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×