search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீரடி சாய்பாபா கோவில் உண்டியலில் ரூ.2.28 கோடி செல்லாத நோட்டுகள்
    X

    சீரடி சாய்பாபா கோவில் உண்டியலில் ரூ.2.28 கோடி செல்லாத நோட்டுகள்

    மராட்டிய மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவில் உண்டியலில் ரூ.2.28 கோடி செல்லாத நோட்டுகள் காணிக்கையாக போடப்பட்டுள்ளது.
    மும்பை:

    பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்களில் பலர் செல்லாத நோட்டுகளை கோவில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தி இருக்கிறார்கள்.

    மராட்டிய மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவிலில் செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின்பு உண்டியலில் அதிக அளவு செல்லாத நோட்டுகள் போடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    கடந்த நவம்பர் மாதம் 24-ந்தேதி அன்று உண்டியல் எண்ணப்பட்டது. அப்போது நல்ல நோட்டுகளுடன் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அதிக அளவில் இருந்தது. மொத்தம் ரூ.2.28 கோடிக்கு செல்லாத நோட்டுகள் இருந்தன.

    அந்த பணத்தை கோவில் நிர்வாகிகள் வங்கியில் டெபாசிட் செய்தனர். நவம்பர் 24-ந்தேதிக்கு பிறகு கோவில் உண்டியல் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×