என் மலர்

  செய்திகள்

  கல் குவாரி குட்டையில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி
  X

  கல் குவாரி குட்டையில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மராட்டிய மாநிலத்தில் கல் குவாரி குட்டையில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர்.
  மும்பை:

  மராட்டிய மாநிலம், கோலாப்பூர் அருகாமையில் உள்ள தனியார் நிறுவனத்தில் நேற்றிரவு ஷிப்ட் பணியை முடித்துவிட்டு சிலர் ஒரு வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பின்னிரவு ஒரு மணியளவில் அருகாமையில் உள்ள பஸ்ட்டாவாடே கிராமத்தின் வழியாக வந்தபோது, ஒரு குறுகிய வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், சாலையோரம் இருக்கும் கல் குவாரியில் அமைந்துள்ள குட்டைக்குள் கவிழ்ந்தது.

  இந்த விபத்தில் ஏழுபேர் உயிரிழந்தனர், 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  Next Story
  ×