என் மலர்

  செய்திகள்

  திருப்பதியில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்த காட்சி.
  X
  திருப்பதியில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்த காட்சி.

  திருப்பதியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரிசனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.
  திருமலை:

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு செய்வதற்காக நேற்றிரவு வந்தார். பத்மாவதி ஓய்வு விடுதியில் தங்கினார். இன்று அதிகாலை 5.30 மணிக்கு வி.ஐ.பி. தரிசன நேரத்தில் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.

  ஏழுமலையானை தரிசனம் செய்தார். அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். தரிசனத்தை தொடர்ந்து, ரங்கநாயகர் மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, லட்டு பிரசாதங்களை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.

  திருப்பதியில் மழை பெய்வதால், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தால் நிருபர்களை சந்திக்க முடியவில்லை.

  ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்றுள்ளதால் திருப்பதியில் ஓ.பன்னீர் செல்வம் சிறப்பு வழிபாடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
  Next Story
  ×