என் மலர்

  செய்திகள்

  அடுத்த ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயரும்: ஐ.நா. தகவல்
  X

  அடுத்த ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயரும்: ஐ.நா. தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  2016-2017 மற்றும் 2017-2018 ஆகிய நிதி ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயரும் என ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது
  புதுடெல்லி:

  இந்தியாவில் அடுத்த ஆண்டு(2017) பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பது குறித்து ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆய்வு மேற்கொண்டது.

  அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

  2016-2017 மற்றும் 2017-2018 ஆகிய நிதி ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயரும். பொருளாதார சீர்திருத்தத்தின் காரணமாக முதலீடு வேகமாக அதிகரிப்பதோடு, உற்பத்தித்துறையும் வலுவடையும். தற்போது செயல்பாட்டில் உள்ள பொருளாதார சீர்திருத்தங்களால் தனியார் முதலீடு அதிகரிக்கும்.

  நடப்பு ஆண்டை பொறுத்தமட்டில் நிதியாண்டின் முதல்கால் பகுதியில் நிரந்தர முதலீடு சுருங்கியதால் பொருளாதார நிலை நடுநிலையில் உள்ளது. அடுத்த ஆண்டில் இது மீட்சி பெறும்.

  அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் தொடங்கினாலும் பின்னர் நிலையான பருவமழையால் விவசாயத்தில் முன்னேற்றமும், சம்பள கமிஷனை மாற்றியமைப்பதால் நுகர்வில் மாற்றமும் ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சியில் மீட்சி உண்டாகும். அதே போல் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதன் மூலம் தனியார் துறையில் முதலீடு அதிகரித்து பொருளாதாரம் சீரான வளர்ச்சியை அடையும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
  Next Story
  ×