என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
344 மருந்துகளின் விற்பனைக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்கியது டெல்லி ஐகோர்ட்
Byமாலை மலர்1 Dec 2016 3:10 PM IST (Updated: 1 Dec 2016 3:10 PM IST)
344 மருந்துகளை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு டெல்லி ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
புதுடெல்லி:
பிரபல இருமல் மருந்து, தலைவலி மாத்திரைகள் உள்ளிட்ட 344 மருந்துகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்த மருந்துகள் அனைத்தும் fixed dose combination என்ற வகையைச் சேர்ந்த மருந்துக் கலவை என்றும், இது பாதகமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து அவற்றை மத்திய அரசு தடை செய்தது.
இதனை எதிர்த்து முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த டெல்லி ஐகோர்ட், மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. அதன்பின்னர் விசாரணை நடைபெற்றது.
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், மத்திய அரசின் தடை உத்தரவை ரத்து செய்வதாக ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இது மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும் என கருதப்படுகிறது.

Next Story
×