என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் பயன்படுத்த நாளை கடைசி நாள்: புதிய அறிவிப்பு
Byமாலை மலர்1 Dec 2016 11:49 AM IST (Updated: 1 Dec 2016 11:49 AM IST)
பெட்ரோல், டீசல் மற்றும் விமான டிக்கெட்டுகள் வாங்க பழைய 500 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்துவதற்கு நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்து, அவற்றை மாற்றுவதற்கான நடைமுறைகளை தீவிரப்படுத்தியது. அதேசமயம், புதிய நோட்டுக்கள் போதிய அளவு வங்கிகளுக்கு வந்து சேராததால், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள், குடிநீர்-மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அத்யாவசிய சேவைகளுக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த சலுகை அளித்திருந்தது.
இந்த சலுகைக் காலம் கடந்த மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து, டிசம்பர் 15-ம் தேதிவரை பழைய 500 ரூபாய் நோட்டுக்களை மட்டும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அந்த உத்தரவில், தற்போது மாற்றம் செய்யப்பட்டு, நாளை வரை மட்டுமே பழைய 500 ரூபாய் நோட்டுக்களை அத்தியாவசிய சேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புதிய அறிவிக்கை இன்று வெளியிடபட்டுள்ளது.
டிசம்பர் 3-ம் தேதி முதல் பழைய 500 ரூபாய் நோட்டுக்களை பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்கோ, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் சமையல் எரிவாயு வாங்குவதற்கோ, விமான டிக்கெட்டுகள் வாங்குவதற்கோ மற்ற அத்தியாவசிய சேவைகளுக்கோ பயன்படுத்த முடியாது என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு இந்த வசதியை பயன்படுத்துவதாக சந்தேகம் கிளம்பியதையடுத்து இந்த சலுகைக் காலம் குறைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் சுங்கச் சாவடிகளிலும் டிசம்பர் 3-ம் தேதி முதல் பழைய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த முடியாது. ரூ.100 அல்லது அதற்கும் குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள், புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

Next Story
×