என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
Byமாலை மலர்1 Dec 2016 8:41 AM IST (Updated: 1 Dec 2016 8:42 AM IST)
பெட்ரோல் விலையை லிட்டருக்கு 13 காசு உயர்த்தியும், டீசல் விலையை 12 காசு குறைத்தும் இந்திய எண்ணெய் கழகம் (ஐ.ஓ.சி.) அறிவிப்பு வெளியிட்டது. இந்த விலை மாற்றம், நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
புதுடெல்லி:
சர்வதேச சந்தையில் நிலவுகிற கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.
அந்த வகையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 13 காசு உயர்த்தியும், டீசல் விலையை 12 காசு குறைத்தும் இந்திய எண்ணெய் கழகம் (ஐ.ஓ.சி.) நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இந்த விலை மாற்றம், நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இந்த மாற்றத்துக்கு பின்னர் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.65.58 ஆகும். டீசல் விலை லிட்டர் ரூ.56.10.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரமும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தேவையான மாற்றத்தை சந்தையில் பிரதிபலிக்க செய்வோம் என இந்திய எண்ணெய் கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story
×