search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தேசிய நெடுஞ்சாலைகளில் நாளை நள்ளிரவு முதல் மீண்டும் சுங்க கட்டணம் வசூல்
    X

    தேசிய நெடுஞ்சாலைகளில் நாளை நள்ளிரவு முதல் மீண்டும் சுங்க கட்டணம் வசூல்

    தேசிய நெடுஞ்சாலைகளில் நாளை நள்ளிரவு முதல் மீண்டும் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும் என சாலை போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது
    புதுடெல்லி:

    ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 11-ந் தேதி வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்தது. பின்னர் இது 24-ந் தேதி வரை படிப்படியாக நீட்டிக்கப்பட்டது. இறுதியாக 2-ந் தேதி (நாளை) வரை சுங்ககட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்தது.

    இந்தநிலையில் டிசம்பர் 2-ந் தேதி (நாளை) நள்ளிரவு முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து உள்ளது. 
    Next Story
    ×