என் மலர்

  செய்திகள்

  பெங்களூருவில் ரூ.1.37 கோடியுடன் வேன் கடத்தல்: தமிழக டிரைவர் இன்று கைது
  X

  பெங்களூருவில் ரூ.1.37 கோடியுடன் வேன் கடத்தல்: தமிழக டிரைவர் இன்று கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெங்களூருவில் ரூ.1.37 கோடியுடன் வேன் கடத்தப்பட்ட சம்பவத்தில் தமிழக டிரைவர் இன்று கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பெங்களூர்:

  பெங்களூரில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனம் வங்கிகளில் இருந்து பணத்தை பெற்று அதனை ஏ.டி.எம்.களில் நிரப்பும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த டொமினிக் ராய் டிரைவராக இருக்கிறார்.

  கடந்த 23-ந்தேதி அவர் ரூ.1.37 கோடி வங்கி பணத்துடன் வேனை கடத்தி சென்றார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மறுநாள் ரூ.45 லட்சம் பணத்துடன் வேனை மீட்டனர்.

  ரூ.92 லட்சத்துடன் தலைமறைவான டொமினிக்ராயை தேடி வந்தனர். அவரது மனைவி எவ்லினை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் டொமினிக்ராயை உப்பார் பேட்டை போலீசார் இன்று காலை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  Next Story
  ×